பரோட்டா வாங்கி சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. ஒருவர் பலி., தாய் உயிர் ஊசல்.!



in Tirupattur Man Dies after Eating Parotta

உணவகத்தில் பரோட்டா வாங்கி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேராம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் பாலாஜி (வயது 24). இவர் கடந்த மார்ச் 01 ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதிக்கு சென்றார். அங்கு வீட்டுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கியுள்ளார்.

காவு வாங்கிய பரோட்டா?

பின் அங்குள்ள சிங்காரப்பேட்டை, மகனூர்பட்டி கிராமத்தில் இருக்கும் உணவகத்தில் பரோட்டா வாங்கி வந்துள்ளார். இதனை பாலாஜி ,  அவரின் தாய் ராஜேஸ்வரி சாப்பிட்டனர். பரோட்டா சாப்பிட்ட பாலாஜி வாந்தி எடுத்து மயங்கினார். மேலும், அவரின் தாயாருக்கு உடல்நலம் குன்றியது. 

இதையும் படிங்க: என்னது கொத்து பரோட்டா இல்லையா? கடையை சூறையாடிய ஐவர் கும்பல்..! 

parotta

இளைஞர் மரணம்

இதனால் இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த பாலாஜி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதுதொடர்பாக திருப்பத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சமூக ஆர்வலருக்கு இப்படியா விதி முடியனும்? விபத்தில் நேர்ந்த சோகம்.!