திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் ஆவேசம்.. பலமணிநேரம் அடைத்து வைக்கப்பட்டதால் கொந்தளிப்பு.!



in Tiruchendur Temple Public Crowd Rucks 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில், விடுமுறை தினமான இன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதி இருந்தது. இதனால் காத்திருப்பு மையத்தில் பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்டு, பின் படிப்படியாக தரிசனத்திற்கு திறந்து விடப்படுகின்றன. 

காத்திருக்கும் பக்தர்கள்

இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம்படை வீடான திருசெந்தூர் முருகன் கோவிலில், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் 6 மணிநேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. 3 சிறார்கள் கொடூர கொலை? சடலமாக ஏரியில் மிதந்த மாணவர்கள்.!

மண்டப அறைகளில் உணவு வசதிகள் இல்லாத நிலையில், கைகுசந்தைகளுடன் வரும் பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். இன்று காலை வந்தவர்களை தற்போது வரை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை.

அதிகாரிகளுக்கு எகிரக முழக்கம்

இதனால் ஆவேசமான பக்தர்கள் தங்களை வெளியே விடுங்கள். குழந்தை மயங்கி விழுகிறது என அபயக்குரல் எழுப்பத் தொடங்கினர். மேலும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இன்று கடலில் ஏற்பட்டுள்ள அரிப்பு தொடர்பாக தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டாஸ்மாக் சரக்கு வாங்க மூதாட்டி காது அறுத்து கொலை; மதுரையில் பகீர்.!