கணவரை இழந்த பெண் குழந்தையுடன் விபரீதம்.. பெண் தற்கொலை, மகன் உயிர் ஊசல்.!



in Thanjavur Kumbakkonam Girl Dies by Suicide  

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், மாமாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் அருண் குமார். இவரின் மனைவி மாலா (36). தம்பதிகளுக்கு சுஜித் குமார் என்ற 11 வயதுடைய மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அருண் இயற்கை எய்தினார். 

தற்போது மாலா தனது மகனுடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் சாலை, கோழிப்பண்ணை பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்தவர், பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர் அம்மிக்கல் போட்டுக்கொலை; மனைவி சம்பவம்.!

thanjavur

விஷம் குடித்து தற்கொலை

இந்நிலையில், மாலா தனது மகனுக்கு உணவில் விஷம் கொடுத்து, பின் தானும் கலந்து கொடுத்து குடித்துள்ளார். இதனை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி இருக்க, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட, மாலா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சுஜித் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்தில் நேர்ந்த சோகம்; மூக்கில் இரத்தம் வெளியேறி பறிபோன உயிர்.!