"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
வறுமையில் படித்து முன்னேறிய காவலருக்கு இப்படியா நடக்கணும்? தஞ்சாவூரில் நடந்த சோகம்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, ரெட்டவயல் கிராமத்தில் கண்ணாயிரமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குதிரை எடுப்பு, கிடாவெட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளன. திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்காக பேராவூரணி காவல் நிலையத்தில் இருந்து கூடுதல் காவல்துறையினர் கேட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்பேரில் தஞ்சாவூர் ஆயுதப்படை காவல்துறையினர் பலரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் தஞ்சாவூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் அரியலூர் மாவட்டம், பெரியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வரும் சக்திவேலின் மகள் சுபபிரியாவும் இடம்பெற்று இருந்தார். நேற்று மாலை நேரத்தில் குதிரை எடுப்பு விழா நிறைவடைந்ததும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சுபபிரயா, சக காவலர்களுடன் ஓய்வெடுக்க தற்காலிக மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தார்.
விபத்தில் நடந்த சோகம்
அச்சமயம், அதே ஊரைசேர்ந்த தண்டாயுதபாணி என்ற நபர் இயக்கி வந்த இருசக்கர வாகனம், சுபப்ரியாவின் மீது மோதி இருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிரியா, காவலர்களால் மீட்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: காரின் டயர் வெடித்து சோகம்; அதிமுக பெண் நிர்வாகி உட்பட இரண்டு பேர் பலி.!
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்ட சுபப்ரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தண்டாயுதபாணி விபத்தை ஏற்படுத்தியதாக பேராவூரணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காவலர் சுப பிரியா, தனது குடும்பத்தை படிக்கும்போதே 2 தங்கைகள், அண்ணனுடன் கட்டிட பணிகள் என வறுமையை சுமந்து அரசுப்பணிக்கு சென்றுள்ளார். அவரின் மறைவு பெரும் சோகத்தை உருவாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: நிஞ்சா ரேஸ் பைக் மோதி காவலர் பரிதாப பலி; சென்னையில் சோகம்.!