தென்காசி: திருநங்கையாக மாற முயற்சி.. ஆணுறுப்பை அறுத்ததால் விபரீதம்.. பரிதாப மரணம்.!



in Tenkasi Transgender Operation without Medical Experience man died

திருநங்கையாக மாற முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், குத்தபாஞ்சான் கிராமம், பறம்பு நகர் பகுதியில் 15 திருநங்கைகள் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை நேரத்தில், இப்பகுதியில் ஒருவர் சடலமாக கிடப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

திருநங்கையாக மாறினார்

கடையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி கணேஷ் (வயது 35) என்பது தெரியவந்தது. இவர் மனதளவில் திருநங்கையாக மாறி, மகாலட்சுமி என்ற திருநங்கையுடன் ஒன்றாக வசித்து வந்தார். தனது பெயரை ஷைலு எனவும் மாற்றிக்கொண்டார்.

இதையும் படிங்க: 12 ம் வகுப்பு மாணவர்களிடம் ஓரினசேர்க்கை தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

Tenkasi

ஆணுறுப்பு அறுக்கப்பட்ட்டதால் அதிர்ச்சி

திருநங்கையர் ஷைலுவின் ஆணுறுப்பை அறுத்தபோது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை கிடைக்காததால் மரணம் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், பாலினம் மாற நினைக்கும் நபர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்படுகிறது. அவர்களின் ரகசியமும் காக்கப்படும் என்பதால், சுயமாக இவ்வாறான செயலை யாரும் கையெடுக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: தென்காசியில் பயங்கரம்; குளத்தில் சடலமாக எரிக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்.!