தென்காசியில் பயங்கரம்; குளத்தில் சடலமாக எரிக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்.!



in Tenkasi 30 Year Old Boy Found on Pond 

 

இளம்பெண்ணின் சடலம் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள இலத்தூர் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில், ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இன்று காலை குளத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று இருந்தது.

இதையும் படிங்க: தென்காசி: போதையில் படியில் தொங்கியபடி வம்பு.. நடத்துனரை கத்தரியால் குத்திய 17 வயது சிறுவன்.!

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டனர். 

Tenkasi

எரித்துக்கொலை

சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் யார்? என தெரியவில்லை. மேலும், பெண்ணின் உடல் முழுவதும் எரிந்தாலும், அவரின் கைகள் எரியாமல் இருக்கிறது. 

பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த இலத்தூர் காவல்துறையினர், அவர் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தும், நேரில் சென்று விசாரணையை முன்னெடுத்து இருக்கிறார். 

இதையும் படிங்க: தென்காசி: 18 வயது சிறுவனுக்கு எமனான நாய்; திடீரென குறுக்கே புகுந்ததால் விபரீதம்.. கண்ணீர் சோகம்.!