4 நாட்கள் தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூடல் - அதிரடி அறிவிப்பு.!

4 நாட்கள் தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூடல் - அதிரடி அறிவிப்பு.!


in-tamilnadu-7-days-tasmac-closed

3 நாட்கள் அரசு விடுமுறையுடன், 1 நாட்கள் முழு ஊரடங்கும் சேர்ந்து தமிழ்நாட்டில் 4 நாட்கள் மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் இயக்குனர், மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையில், "ஜன. 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ஆம் தேதி வடலூர் இராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 

tamilnadu

இதனால் மேற்கண்ட நாட்களில் மதுவில்லா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மேற்கூறியுள்ள நாட்களில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. கடை மேற்பார்வையாளர்கள் கடையினை பூட்டி சீல் வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப்போல, தமிழகத்தில் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால் மேற்கூறிய 3 நாட்களுடன் கீழுள்ள 1 நாட்களும் சேர்ந்து, 4 நாட்கள் மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருக்கும்.