#JUSTIN: 10 நாளில் பயணிகளின் உயிருக்கு எமனான அரசுப்பேருந்து ஓட்டுநர்.. சிவகங்கையில் திக்.. 35 பேரின் நிலை என்ன?



in Sivaganga Govt Bus Accident 35 More Injured

பேருந்து விபத்தில் சிக்கி 35 பயணிகள் காயம் அடைந்தனர். 18 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப்பேருந்து:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையானூர் கிராமத்தில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்துக்கு இன்று அரசுப்பேருந்து வழக்கம்போல புறப்பட்டு பயணம் செய்து கொண்டு இருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக இருந்தவர், புதிய நபர் என கூறப்படுகிறது. இவர் பணிக்கு சேர்ந்து 10 நாட்கள் மட்டுமே ஆகிறது.

இதையும் படிங்க: உயிர்போகும் தருவாயிலும் 35 மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்.. ராணிப்பேட்டையில் நெகிழ்ச்சி.!

பள்ளத்தில் விழுந்தது:

இந்நிலையில், பேருந்து அங்குள்ள கீழராயனூர் கிராமத்துக்கு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் காயம் அடைந்தனர். 

accident

காவல்துறை விசாரணை:

விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர், பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி.செய்தனர். இவர்களில் 18 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

புதிய ஓட்டுநரால் சோகம்:

இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பணியில் இருந்த ஓட்டுநர் புதியவர் என்பதால், ஒருசில வளைவு மற்றும் திருப்பம் உள்ள பகுதிகளில் நடத்துனரின் உதவியுடன் வாகனத்தை இயக்கி இருக்கிறார். அதன் பின்னர் வாகனம் விபத்தில் சிக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: JUSTIN: கணநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து.. பெண்ணுக்கு நேர்ந்த கொடூர மரணம்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!