சேலம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!



in Salem Yercaud Teacher Arrested Pocso Act 


சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் இளையகன்னு. 

இவர் அதே பள்ளியில் பயின்று வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்து இருக்கிறார். 

பாலியல் தொல்லை

இதனையடுத்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை காவலாளி Vs நோயாளியின் உறவினர்.. நாக்கூசும் வார்த்தையால் நடந்த வாதம்.!

Salem

போக்ஸோவில் கைது

புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த நிலையில், இளையக்கண்ணுவின் மீதான குற்றசாட்டு உறுதியானது.

இதனையடுத்து, அவரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது ஆசிரியர் இளையக்கன்னு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாணவியிடம் ஆபாச பேச்சு; தற்காலிக ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பிய பள்ளிக்கல்வித்துறை.. கைது நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்.!