#Breaking: 14 வயது சிறுவன் அடித்துக்கொலை; பள்ளி பேருந்தில் நடந்த சண்டையில் விபரீதம்.! சேலத்தில் பயங்கரம்.!



in Salem Edappadi 14 year Old Boy Died 

 

பேருந்துக்குள் நடந்த சண்டையில் 14 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் எடப்பாடியில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

இதையும் படிங்க: சேலம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

இந்த பள்ளியில் வெள்ளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு (வயது 14), ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தினமும் பள்ளியின் வாகனத்தில் பயணம் செய்வது வழக்கம்.

பள்ளி வாகனத்தில் மோதல்

இதனிடையே, நேற்று மாலை பள்ளி முடிந்ததும் கந்தகுரு பள்ளி வாகனத்தில் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது, வாகனத்தில் கந்தகுருவுக்கும் - சில மாணவர்களுக்கு இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

Salem

இந்த சம்பவத்தில் கந்தகுருவின் கழுத்து, நெஞ்சு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நிலைகுலைந்துபோன சிறுவனை, உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

சிறுவன் மரணம்

சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தநிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இதனால் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விஷயம் தொடர்பான விசாரணை தொடங்கி இருக்கிறது. எதற்காக மாணவர்கள் மோதிக்கொண்டனர்? மாணவரை தாக்கியது யார்? என விசாரணை நடைபெறுகிறது. மேலும், அப்பகுதியில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை காவலாளி Vs நோயாளியின் உறவினர்.. நாக்கூசும் வார்த்தையால் நடந்த வாதம்.!