தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கள்ளக்காதலுக்கு இடையூறு.. 4 வயது குழந்தைக்கு தாய் செய்த கொடுமை.. பரிதாப பலி.!
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகேயுள்ள பகுதியில் வசிப்பவர் முத்தையன். கூலித்தொழிலாளி ஆவார். முத்தையனின் மனைவி சினேகா. இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, தற்போது 4 வயது குழந்தை பூவரசியுடன் வசித்து வருகிறார்கள்.
இதனிடையே, சினேகாவுக்கு சரத்குமார் என்பவருடன் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளார். இதனால் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். விஷயம் முத்தையனுக்கு தெரியவந்து, அவர் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அறிவுரை ஏற்பது போல நடிப்பு
நேற்று அங்கு அதிகாரிகள் வழங்கிய அறிவுரையின்பேரில், கணவருடன் சேர்ந்து வாழ்வதாக சினேகா கூறியுள்ளார். பின் இருவரும் பேருந்து நிலையம் வந்துவிட, அங்கிருந்து தனியாக புறப்பட்ட சினேகா, தனது குழந்தையையும் உடன் அழைத்துக்கொண்டு பரமத்தி வேலூர் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: காதில் சீல் வடிந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்? விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
கிணற்றில் வீசி குழந்தை கொலை
உறவினரான கோகிலா என்ற பெண்மணியின் வீட்டிற்கு சென்றவர், அவர் பேச்சை கேட்டு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். பச்சிளம் குழந்தை கிணற்றுக்குள் வீசப்படுவதை கண்டு அதிர்ந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நேரில் வந்த அதிகாரிகள் குழந்தையின் சடலத்தை மீட்டனர். மேலும், சினேகாவை கைது செய்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கொலை செய்யப்பட்டது அம்பலமாகவே, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கோகிலாவும் கைது செய்ய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி அடித்தே கொலை; கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்.!