புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
காதல் திருமணம் கசந்து கள்ளக்காதல்; சொந்த மனைவி மீது ஆசிட் வீசி அதிர்ச்சி தந்த கணவன்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மால்வாணி பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் இருக்கிறார். தம்பதிகள் இருவரும் கடந்த 2019 ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள்.
மகிழ்ச்சியாக தம்பதிகள் வாழ்ந்து வந்த நிலையில், பெண்ணின் கணவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் காதல் மனைவியை மறந்த நபர், கள்ளகாதலியுடன் ஒருகட்டத்தில் குடித்தனம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காதல் மனைவி சயனைடு கலந்து கொலை; 20 இலட்சம் வரதட்சணை கேட்டு கணவன் அதிர்ச்சி செயல்.! தவிக்கும் கைக்குழந்தை.!
போதைக்கு அடிமை
இந்த விஷயம் 27 வயது இளம்பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அவர் கடந்த 3 மாதமாக தனது கணவரை பிரிந்து சென்று தனியே வசித்து வந்துள்ளார். போதைப்பொருள் பழக்கத்திற்கு பெண்ணின் கணவர் அடிமையாகி இருக்கிறார். அவ்வப்போது தனது மனைவியை தொடர்பு கொண்டு அவதூறு பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், போதையில் இருந்த நபர், தமது மனைவியின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: காதல் மனைவி சயனைடு கலந்து கொலை; 20 இலட்சம் வரதட்சணை கேட்டு கணவன் அதிர்ச்சி செயல்.! தவிக்கும் கைக்குழந்தை.!