புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
காதலை ஏற்க மறுத்ததால் கொடூரம்; இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல்., பதறவைக்கும் காட்சி.!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜெராக்ஸ் கடையில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரை கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சித்திக் ராஜா என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பெண் மீது சரமாரி தாக்குதல்
பலமுறை அவர் தனது காதலை வெளிப்படுத்தியும் பெண்மணி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சமீபத்தில் கடைக்குச் சென்ற சித்திக் ராஜா, பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, அவர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இளைஞருடன் வந்த நபர், சில நிமிடங்கள் கழித்தே நண்பரை ஆஸ்வாசப்படுத்தினார்.
இதையும் படிங்க: கலாட்டா கல்யாணம்... மணமகனின் தாய்க்கு கத்தி குத்து.!! தந்தை வெறி செயல்.!!
#Watch || மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கடைக்குள் புகுந்து தாக்குதல்#ThanthiTV #Madurai #crimes pic.twitter.com/4NpqtoqQvs
— Thanthi TV (@ThanthiTV) November 21, 2024
இதனால் காயமடைந்த பெண்மணி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்திய இளைஞர் சித்திக் ராஜா தலைமறைவாகி இருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் பரபரப்பு காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: மதுரை: மனைவிக்கு வளைகாப்பு நடத்திவிட்டு கணவர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்.!