புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நிலத்தை அளவிட ரூ.5 ஆயிரம் இலஞ்சம்.. கணவரை இலஞ்சம் வாங்க அனுப்பிய பெண் சர்வேயர்..!
அரசு அலுவலகத்தில் பணியாற்றுவோர், அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கி சிறப்புடன், பல சலுகைகளை பெற்று உழைத்து வந்தாலும், அவர்களில் ஒருசிலர் இலஞ்சம் என்ற விஷயத்தில் குறியாக இருக்கின்றனர்.
இவ்வாறான நபர்கள் செய்யும் ஊழல் காரணமாக, பிறப்பு முதல் இறப்பு வரை இலஞ்சம் தலைவிரித்தாடுவதாக மதுரை உயர்நீதிமன்றமும் கவலை தெரிவித்து இருந்தது.
இதனிடையே, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில், இலஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம், கீழ உரப்பனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அஜித் குமார்.
இதையும் படிங்க: விருந்தினர் மாளிகையில் விபச்சாரம்; வெளிநாட்டு பெண்களை அழைத்து வந்து ஜாலியா., ஜிம்கானா.!
இவர் தனது நிலத்தை அளவிட சர்வேயர் சித்ரா தேவியை நாடியிருந்த நிலையில், அவர் ரூ.5 ஆயிரம் இலஞ்சம் கேட்டுள்ளார். இலஞ்ச பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டதுபோல நடித்தவர், அதனை தருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, விபரமாக தனது கணவரிடம் பணம் கொடுக்கச் சொன்ன நிலையில், சர்வேயரின் கணவர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரின் வாக்குமூலத்தின் பேரில் பெண் சர்வேயரும் கைதாகினர்.
இதையும் படிங்க: சென்னை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்., காவலரைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கைது.!