புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விருந்தினர் மாளிகையில் விபச்சாரம்; வெளிநாட்டு பெண்களை அழைத்து வந்து ஜாலியா., ஜிம்கானா.!
சென்னையில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை கண்காணித்து ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு, மணமகள் நகர், பாரதி அவென்யூ பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், தனியார் விருந்தினர் மாளிகை ஒன்றில் சோதனை செய்யப்பட்டன.
முன்னாள் டிஐஜி மகனுக்கு சொந்தமானது
அப்போது, அங்கு பெண்கள் மற்றும் ஆண்கள் இருந்ததும், போதைப்பொருட்கள், பாலியல் தொழிலில் என விருந்தினர் மாளிகை விவகாரமான மாளிகையாக செயல்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமல்லாது, அந்த விருந்தினர் மாளிகை ஓய்வுபெற்ற டிஐஜி ராமச்சந்திரன் மகன் விக்ரமுக்கு சொந்தமானது என்பது உறுதியானது.
இதையும் படிங்க: #Breaking: வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பலத்த தரைக்காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
பாலியல் தொழில்
தற்போது வெளிநாட்டில் இருக்கும் விக்ரம், நண்பரின் உதவியுடன் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2014 ம் ஆண்டு முதல் மாளிகையை வாடகைக்கு விட்டு இருக்கிறார். வீட்டை வாங்கிய நிர்மலா, விருந்தினர் விடுதி என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், லோகாண்டோ ஆப் மூலமாக பெண்களுடன் தனிமையில் இருக்க வந்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். விருந்தினர் மாளிகையில் கென்யா உட்பட பல நாடுகளை சேர்ந்த பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: திருச்சி அருகே சோகம்...மயங்கி விழுந்த சிறுவன்.!! வகுப்பறையில் பிரிந்த உயிர்.!!