சென்னை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்., காவலரைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கைது.! 



in Chennai Drug Smuggling Case Cops Arrested 2 involved In this Case 

சென்னை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், சென்னை நீதிமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், காவலர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜேம்ஸுக்கு போதைப்பொருளை விற்பனை செய்ய வழங்கியதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல பிஎஸ்ஓ-விடம் விசாரணை நடத்தப்படுகிறது.

அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம்

வடபழனியில் ரவீந்திரநாத் என்பவரை கைது செய்து, போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் தியாகராய நகர் காவலர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, ஜேம்ஸின் அலைபேசியை ஆய்வு செய்தபோது ஆனந்த் என்பவர் அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: பல இளைஞர்களுடன் காதல்.. 19 வயது இளைஞருடன் ஓட்டம் பிடித்த செவிலியர்.. போலீஸ் ஸ்டேஷனில் கதறல்.! 

விசாரணை வட்டத்தில் இருக்கும் ஆனந்த், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குனரிடம் பிஎஸ்ஓ-வாக வேலை பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.விசாரணைக்கு பின்னர் ஆனந்த் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வங்கிக்கணக்கில் ரூ.30 இலட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் உறுதியானது.

இதையும் படிங்க: கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்; இளைஞருக்கு ஜாமின் மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு.!