சாதம் வடித்த நீர் விழுந்து, 3 வயது சிறுவன் பரிதாப பலி.. போராடி பறிபோன உயிர்.. மதுரையில் நடந்த சோகம்.!



in Madurai 3 year Old Boy Dies Hot Water 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி, குன்னாரம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கேப்டன் பிரபாகரன். இவரின் மனைவி அன்னக்கிளி. தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். 

இதனிடையே, கடந்த மாட்டுப்பொங்கல் அன்று, சாதம் வடித்த கொதிக்கும் நீரை அன்னக்கிளி அடுப்பு அருகே கீழே வைத்துள்ளார். அச்சமயம், தம்பதியின் மகன் நிவினேஷ் (வயது 3), எதிர்பாராத விதமாக கொதிநீரில் விழுந்து இருக்கிறார். 

இதையும் படிங்க: குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்பு; மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நெகிழ்ச்சி செயல்.!

madurai

மருத்துவமனையில் பறிபோன உயிர்

இதனால் உடல் வெந்தது. சிறுவன் அபயக்குரலில் அலறித்துடிக்க, அவனை மீட்ட குடும்பத்தினர், அவசர ஊர்தி உதவியுடன் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின் மேல் சிகிச்சைக்காக சிறுவன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவே, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் இருந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இந்த விஷயம் குறித்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தலித் சிறுவனின் மீது சிறுநீர் கழித்து அட்டூழியம்; மதுரையில் சாதிய தீண்டாமை கொடூரம்.!