90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்பு; மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நெகிழ்ச்சி செயல்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பானடி பகுதியில் வசித்து வருபவர் சுப பிரகாஷ். இவரின் மனைவி நந்தினி. தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில நாட்களாக குழந்தைக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் உட்பட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் குழந்தையை பெற்றோர் ஜன.13 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுத்தபோது, குழந்தையின் மூச்சுக்குழாய்யில் எல்இடி பல்பு சிக்கியது தெரியவந்தது.
2 மணிநேரத்திற்கு பின் எல்இடி பல்பு அகற்றம்
இதனையடுத்து, குழந்தைக்கு மயக்கவியல் துறை, நெஞ்சக நோய்த்துறை, அறுவை சிகிச்சைத்துறை அடங்கிய மருத்துவ குழுவினர், உள்நோக்கி பரிசோதனை கருவியை உபயோகம் செய்து எல்.இ.டி விளக்கை 2 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் பத்திரமாக எடுத்தனர்.
இதையும் படிங்க: தலித் சிறுவனின் மீது சிறுநீர் கழித்து அட்டூழியம்; மதுரையில் சாதிய தீண்டாமை கொடூரம்.!
குழந்தையின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், மருத்துவ குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், குழந்தை விளையாட்டு தனமாக பெற்றோருக்கு தெரியாமல் எல்இடி பல்பை விழுங்கி இருக்கலாம்.
ஆகையால், சிறிய பொருட்களை குழந்தைகளுக்கு எட்டும் இடங்களில் வைக்க வேண்டாம் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகளை அறுத்து சமபந்தி விருந்து; இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்.!