ஆண்டவா என்ன கொடுமை இது? 14 வயது சிறுமிக்கு தாலிகட்டி, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற கொடுமை.. தாய் உட்பட 3 பேர் கைது.!



in-krishnagiri-hosur-child-marriage

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 30). இதே பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கு 14 வயது ஆகிறது. 

இதனிடையே, சிறுமி - மாதேஷுக்கு, கடந்த மார்ச் 03 நன்று திருமணம் நடைபெற்று முடிந்தது. கர்நாடக மாநிலத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இதையும் படிங்க: இன்ஸ்டா காதலனுடன் திருமணம், இன்ஸ்டண்ட் தேனிலவு.. கம்பி நீட்ட முயன்றவரிடம் கறார் காட்டிய பெண் வீட்டார், காவல்துறையினர்.!

இந்த விஷயத்திற்கு சிறுமியின் தாய் நாகம்மா (வயது 29) உதவியாக இருந்துள்ளார். நேற்று முன்தனத்தில் மாதேஷ், சிறுமி வருகை தந்தனர். அப்போது, சிறுமியோ திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி, மாதேஷின் வீட்டில் இருந்து தப்பி, பக்கத்தில் இருக்கும் பாட்டியின் வீட்டிற்கு சென்றார்.

Krishnagiri

வீடியோ வைரல்

சிறுமியை மணமகனின் உறவினர்கள் சென்று குண்டுக்கட்டாக தூக்கி வந்தனர். இதனால் சிறுமி கதறியழுத நிலையில், இவ்விசயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியது.

மேலும், சிறுமியின் பாட்டியும் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுமிக்கு தாலி கட்டிய மாதேஷ், அவரின் அண்ணன் மல்லேஷ், சிறுமியின் தாய் நாகம்மா ஆகியோரை போக்ஸோவில் கைது செய்தனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலி இறந்த துக்கத்தால் சோகம்; கள்ளக்காதலன் விஷம் குடித்து உயிரை மாய்த்த விபரீதம்.!