80 வயது மூதாட்டியை பலவந்தப்படுத்தி வன்கொடுமை.. கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை.. தமிழகத்தில் கொடுமை.!



in Krishnagiri 80 Year Old Women Raped by Stranger 

60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் 80 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த நபருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே இருக்கும் கிராமத்தில் 80 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவர் மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 35 வயதுடைய இளைஞர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

Krishnagiri

பாலியல் வன்கொடுமை:

பின் மூதாட்டியை கீழே தள்ளியவர், பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்ட உள்ளூர் மக்கள், சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படவே, 8 தையல்கள் போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

Krishnagiri

பாலியல் தொல்லை கைது:

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பெரியாயி (வயது 60). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக அலாவுதீன் என்பவரின் வீட்டுக்கு முன்புறம் உள்ள திண்ணையில் படுத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 29) என்பவர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மூதாட்டி வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!