#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
காஞ்சிபுரம்: போதை ஆசாமிகளால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்; பதறவைக்கும் வீடியோ..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராயன்குட்டை, பள்ளத்தெரு பகுதியில் வசித்து வரும் சிறுமி ஜெயஸ்ரீ. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் வெளியே, ஆட்டோ அருகில் நின்று விளையாடி இருக்கிறார்.
ஆட்டோவுக்குள் சிறுமியின் உறவினர்கள் இருவர் அமர்ந்து இருக்க, சிறுமி சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோவின் கம்பிகளை பிடித்து சாலையில் ஒருபக்கமாக சாய்ந்து விளையாடினார்.
இதையும் படிங்க: #JustIN: காதலிக்க மறுத்த சிறுமியை வீடுபுகுந்து கற்பழித்த கொடூரம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்.!
சிறுமி காயம்
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த நபர்கள், சிறுமியின் மீது மோதியுள்ளனர். இந்த விபத்தில் சிறுமி தூக்கி வீசப்பட்டார்.
மேலும், சிறுமியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 2 நபர்களும் காயமடைந்தனர். சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், போதை இளைஞர்களிடம் சிவகாஞ்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது மோதிய பைக் - தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்#kanchipuram #bike #cctv #thanthitv pic.twitter.com/nlzBh2z7FY
— Thanthi TV (@ThanthiTV) February 14, 2025
இதையும் படிங்க: #Breaking: காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. 3 சிறார்கள் கொடூர கொலை? சடலமாக ஏரியில் மிதந்த மாணவர்கள்.!