டிஎன்ஏ சோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!



in Erode Sathyamangalam 17 year Old Girl Sexually Abused Later TVK Local Administrator Arrested by DNA Verified Method 

கல்லூரியில் படித்து வந்த சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுந்தரம் என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!

வன்கொடுமை:

இந்நிலையில், இதே கிராமத்தில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவரின் மீது சிறுமி வன்கொடுமை தொடர்பான புகார் எழவே, ஆதாரம் இல்லாததால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. இதனிடையே, கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

Crime news

குழந்தை பிறந்தது:

பின் யுவராஜ் மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு யுவராஜ் காரணம் என்பது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தையை பெற்றெடுத்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.

டி.என்.ஏ. சோதனை:

இதனையடுத்து, யுவராஜின் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: +2 மாணவி வன்கொடுமை.. தாயும், மகனும் அரங்கேற்றிய கொடூரம்..!