ஐடி ஊழியரை ஏமாற்றிய இளைஞர்.. ஸ்கெட்ச் போட்ட பெண்.. உள்ளே தூக்கி வைத்த காவல்துறை.!



in Chennai Koyambedu Police Arrested Youth Cheating Girl Name of Marriage 

போலி திருமண வாக்குறுதியால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

இளம்பெண்:

சென்னையில் உள்ள கோயம்பேடு, சின்மயா நகரில் வசித்து வரும் 25 வயதுடைய இளம்பெண், தனியார் சாப்ட்வெர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தாம்பரம், சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: டேட்டிங் ஆப் பழக்கத்தால் சோகம்.. திண்டுக்கல் டிஎஸ்பி மகன் கைது.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!

chennai

காதல்:

இவர் வேலைகேறியில் செயல்படும் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், 2023ம் ஆண்டு முதல் இருவரும் பழகி வந்துள்ளனர். நட்பாக தொங்கிய பழக்கம் பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. பின் திருமண ஆசை வார்த்தை பேரில் இருவரும் நெருங்கி பழகி இருக்கின்றனர்.

அதிரடி கைது:

தமிழரசன் பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். பின் திருமணம் குறித்து பெண் கேட்டபோது, அவரை மிரட்டி தாக்கி இருக்கிறார். இதனால் காதலன் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் பெண் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி தமிழரசனை கைது செய்தனர். 

இதையும் படிங்க: திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நண்பரை அழைத்து வந்து நடந்த கொடுமை.. கோவையில் ஷாக்.!