Ex காதலிக்கு ஆபாச மெசேஜ்.. கதை முடித்த கணவன்.. திண்டுக்கல்லில் நடந்த பயங்கரம்.!
திருமணம் முடிந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கொலை செய்யப்பட்டார்.
நட்பு-காதல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், வேலாயுதம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அரவிந்தன் (வயது 22). இவர் கூலித் தொழிலாளி ஆவார். சிறுமலை கடமான்குளம் கிராமத்தில் இளம்பெண் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் பேசி வந்த நிலையில், நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!
வேறொருவருடன் திருமணம்:
இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே, காதல் ஜோடியை கண்டித்த பெற்றோர், பெண்ணுக்கு அய்யலூர் கிராமத்தில் வசித்து வந்த வீரமணி (வயது 24) என்ற இளைஞருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில், சிறுமலை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
கண்டிப்பு:
திருமணம் முடிந்த பின்னரும் பெண்ணின் ஸ்மார்ட்போனுக்கு அரவிந்தன் ஆபாச மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார். இந்த விஷயத்துக்கு பெண்மணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எனக்கு மெசேஜ் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். இதுகுறித்து கணவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார். அரவிந்தன் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
நேரில் வந்தார்:
இதனையடுத்து, தனது மனைவியின் ஸ்மார்ட்போனில் இருந்து சிறுமலைக்கு வருமாறு வீரமணி அரவிந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 14ம் தேதி அரவிந்தன் பெண்ணின் வீட்டுக்கு வந்த நிலையில், வீரமணி மனைவியிடம் தகராறு செய்வது தொடர்பாக கேட்டு கண்டித்து இருக்கிறார். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது.
கொலை:
அப்போது, வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த வீரமணி அரிவாளால் அரவிந்தனை வெட்டி இருக்கிறார். சரமாரியாக வெட்டியதில் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் வீட்டுக்கு பின்புறம் பள்ளம் தோண்டி அரவிந்தன் உடலை புதைத்து குப்பை கொட்டி மறைத்துள்ளார். இந்த விஷயம் குறித்து வீரமணி தனது நண்பர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த தகவலை அறிந்த வீரமணியின் நண்பர் ஊராரிடம் தெரிவிக்கவே, தகவல் அறிந்த திண்டுக்கல் அறிந்த காவல்துறையினர் அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலை கைவிடாததால் ஆத்திரம்.. தங்கையை அடித்தே கொன்ற சகோதரன்..!