குரங்கை கொன்று சமைத்து சாப்பிட்ட தொழிலாளி; திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜாராம் (வயது 33). இவர் கேட்டரிங் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். ராஜாராமுக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது.
தோட்டத்தில் சேட்டை காட்டிய குரங்கு
சமீபகாலமாக மாந்தோப்பு பகுதியில் குரங்குகள் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளன. ராஜாராம் வனவிலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் பழக்கம் கொண்ட நபரான வடுக்கப்பட்டி பகுத்தியை சேர்ந்த ஜெயமணியை (31) நேரில் சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: கலியுகத்திலும் இப்படி ஒரு அரிச்சந்திரன்.. பயணியின் 3 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.!
இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி ஆவார். ஜெயமணியை நேரில் சந்தித்த ராஜாராம், தோட்டத்தில் தொல்லை செய்யும் குரங்குகளை கொலை செய்ய கூறியுள்ளார். மேலும், ரூ.1000 பணம் கூலியாக கொடுக்கப்பட்டுள்ளது.
குரங்கை ஒன்று சாப்பிட்டார்
கூலியை பெற்றுக்கொண்ட ஜெயமணி, மாந்தோப்புக்கு வந்து குரங்குகளை சுட்டுக்கொன்றனர். பின் குரங்கை சமைத்து சாப்பிட்டு, குரங்கின் தோல்களை வடுக்கப்பட்டியில் இருக்கும் தோட்டத்தில் புதைத்தார்.
இந்த விஷயம் வனத்துறையினரின் கவனத்திற்கு செல்லவே, அதிகாரிகள் ராஜாராம், ஜெயமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, வெடி, குரங்கு தோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மணக்கோலத்தில் பார்க்கவேண்டிய பிள்ளைகளை சடலமாக பார்த்த பெற்றோர்.. திண்டுக்கல்லில் சோகம்..!