கலியுகத்திலும் இப்படி ஒரு அரிச்சந்திரன்.. பயணியின் 3 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.!



Auto Driver Helps Passenger Missing bag handed to Cops in Dindigul

நேர்மையின் சிகரமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் மதன் (வயது 35). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். வத்தலகுண்டு பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். 

இதையும் படிங்க: மணக்கோலத்தில் பார்க்கவேண்டிய பிள்ளைகளை சடலமாக பார்த்த பெற்றோர்.. திண்டுக்கல்லில் சோகம்..!

இன்று (07 மார்ச் 2025), கட்டகாமன்பட்டி கிராமத்தில் இருந்து ரெட்டியபட்டிக்கு, பயணியுடன் சவாரிக்கு சென்றார். பயணியை இறக்கிவிட்டு மீண்டும் வரும்போது, ஆட்டோவில் தங்க சங்கிலி இருந்தது. ஆட்டோவில் பயணம் செய்தவர் தவறவிட்டதை அவர் உணர்ந்துகொண்டார். 

Dindigul

உரியவரிடம் ஒப்படைப்பு

இதனையடுத்து, பயணியின் முகவரி, பெயர் தெரியாத காரணத்தால், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் நேரடியாக வந்து விஷயத்தை கூறி நகையை ஒப்படைத்தார். இந்நிலையில், நகையை தவறவிட்ட விவசாயி கணேசனும் காவல் நிலையம் வந்துவிட, ஆட்டோ ஓட்டுநர் நேரடியாக விவசாயியிடம் நகையை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர். 

ஆட்டோ ஓட்டுநர் மதனுக்கு நிலக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் சிலைமணி தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர். 

இதையும் படிங்க: திண்டுகல்லில் அதிர்ச்சி.! பெற்ற மகனை கொலை செய்த தந்தை.! சிறிய சண்டையால் துடி துடித்து பறிபோன உயிர்.!