நாட்டு வெடிகுண்டு வெடித்து 6 வயது சிறுமி உடல் துண்டாகி மரணம்; விளையாடச் சென்றபோது நடந்த சோகம்.!

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த சிறுமி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அபி (வயது 28). இவரின் மனைவி நாகவேணி (வயது 25). தம்பதிகளுக்கு கவிநிலா (வயது 6) என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் பெங்களூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் கூலித் தொழிலார்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையின்போது சோகம்; வீட்டை சுத்தம் செய்த பெண் பலி.!
தர்மபுரி காரிமங்கலம், பூமாண்டஅள்ளி கிராமத்தில் வசித்து வந்த வள்ளி என்ற பெண், நாகவேணியுடன் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் தோழியாக பழகி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வந்துள்ளனர். வள்ளி தனது சொந்த கிராமத்திற்கு, சிறுமி கவிநிலாவை பெற்றோர் அனுமதியுடன் அழைத்து வந்துள்ளார்.
உடல் துண்டாகி பலி
வள்ளியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தருமன். நேற்று மதிய நேரத்தில் சிறுமி தர்மனின் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, மாடியில் உள்ள அறையில் நாட்டு வெடிகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அறை திடீரென வெடித்தது. இதனால் சுவர் கீழே விழுந்ததில், சிறுமி உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் காவல்துறையினர், சிறுமியின் உடலை எம்கேட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோரும், மகளின் உடலை பார்த்து கதறியழுத்தனர். விசாரணையில், தருமன், அவரின் மகன் கிருஷ்ணன் அனுமதியின்றி பன்றி வேட்டையாட வெடிகளை தயாரித்தது தெரியவந்தது. விசாரணையைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: படிக்கும் வயதில் காதல் திருமணம்; 17 வயது சிறுமிக்கு குழந்தை.. குடித்தனம் நடத்தி அதிர்ச்சி.!