அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
படிக்கும் வயதில் காதல் திருமணம்; 17 வயது சிறுமிக்கு குழந்தை.. குடித்தனம் நடத்தி அதிர்ச்சி.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். இதே பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. காதல் ஜோடியின் செயல்பாடுகள் நாளடைவில் இருவருக்கும் இடையேயான காதலை குடும்பத்தினரிடம் தெரிவிக்க வைத்துள்ளது.
கோவிலில் திருமணம்:
இந்த விஷயத்திற்கு இருதரப்பு பெற்றோரும் மறுப்பு தெரிவிக்க, ஒருகட்டத்தில் காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வருண்குமார் Vs நாதக பிரச்சனை உண்டாகியது எப்படி? முழு விளக்கம்.. பரபரப்பு தகவல்.!
தம்பதிகளாக குடித்தனம்
இருவரும் கணவன் - மனைவியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த டிச.11 அன்று சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் குறித்து மகளிர் நலன் & குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகவே, பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #JustIN: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!