இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி., 3 மாணவிகள் காயம்.!



in Cuddalore Govt Bus Two Wheeler Accident 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேசவநாயகபுரம் பகுதியில் வசித்து வரும் 3 மாணவிகள், குறிஞ்சிப்பாடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல, பேருந்து நிறுத்தத்தில் இன்று மாலை நேரத்தில் காத்திருந்தனர்.  

அப்போது, அதே கிராமத்தில் வசித்து வரும் இளைஞர்கள், குறிஞ்சிப்பாடி செல்லும் தங்களின் வாகனத்தில் வாருங்கள் என மாணவிகளை அழைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரும்பலகை விழுந்து 2 மாணவர்கள் தலையில் காயம்; வடலூரில் சோகம்.!

இருசக்கர வாகனம் - பேருந்து மோதி விபத்து

இதனால் ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம் செய்தனர். பெரம்பூர் சாலையில் பேருந்து, முன்னால் சென்றுகொண்டு இருந்த கரும்பு டிராக்டரை முந்த முற்பட்டது. 

Cuddalore

அச்சமயம், மாணவிகள் இருசக்கர வாகனம் பேருந்து மோதி இருக்கிறது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐவரும் காயமடைந்தனர். இவர்களை மீட்ட உள்ளூர் மக்கள், சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: டிராக்டர் மோதி வீட்டின் முன் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்; 4 வயது சிறுமி பலி.!