அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சாதி பெயரைச் சொல்லி, புழுவைப்போல் நடத்தியதால் துயரம்; அரசு அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை.!
சமுதாயத்தின் பேரால் நடக்கும் ஏற்றத்தாழ்வுகள் எங்கும் தொடருகிறது. தனிமனிதனின் ஒழுக்கம், அனைவரும் சமம் என்ற எண்ணமே சமத்துவத்தை மேலோங்க வழிவகை செய்யும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் உபத்யாய். இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அரசுத்துறையில் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: யூடியூப் தம்பதி விபரீதம்; கணவன் - மனைவியாக அதிர்ச்சி செயல்.!
இவரின் மூத்த அதிகாரி திபேந்திர படேல். இவர் மாற்று சமூகத்தவர் ஆவார். இவர் தனது கீழ்நிலை அதிகாரியான பிரதீப்பை சமூக ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
சித்ரவதை
தினமும் பிரதீப்பை புழுவைப்போல் பாவித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும், அவதூறாக பேசி, பிராமணர்களை பணியில் இருந்து விலக்குவதாகவும் தினம் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

தற்கொலை
இதனால் ஒருகட்டத்தில் மனவேதனையடைந்த பிரதீப், தனக்கு நடந்த கொடுமை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் சடலத்தை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் குறித்து அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: தேர்வில் தோல்வியுற்றதால் சோகம்; 7 வது மாடியில் இருந்து சிறுமி கீழே குதித்து தற்கொலை.!