#Breaking: போதை ஆசாமியால் மீண்டும் அதிர்ச்சி.. சென்னை இரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீற முயற்சி.!



in Chennai Pazhavanthangal Lady Cop Sexual Harassed By Man 

 

சென்னை பழவந்தாங்கல் இரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீற முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள பழவந்தாங்கல் இரயில் நிலையத்தில், இரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்ற பெண் காவலரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு தகராறு; தவெக நிர்வாகி சரமாரி தாக்குதல்.! 

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நுண்பிரிவில் 25 வயதுடைய பெண் காவலர் வேலை பார்த்து வருகிறார். 

அத்துமீற முயற்சி

இவர் நேற்று முன்தினம் இரவில், எழும்பூரில் இருந்து பழவந்தாங்கல் நோக்கி மின்சார இரயிலில் பயணம் செய்து, பழவந்தாங்களில் இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது, இருட்டான பகுதியில் போதை ஆசாமி ஒருவர் இருந்துள்ளார். 

chennai

பெண் காவலர் முன்னால் சென்றப்போது, அவரை பின்தொடர்ந்து கீழே தள்ளி பாலியல் பலாத்தாரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் பெண் அலறி, கயவனின் கைகளை கடித்து இருக்கிறார். 

வெளுத்து வாங்கிய பொதுமக்கள்

சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் இளைஞரை பிடித்து அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த மாம்பலம் காவல்துறையினர், இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர் சத்திய பாலு என்பதும், தனியாக செல்லும் பெண்களை இதேபோல சீண்டி அத்துமீறலில் ஈடுபடுவதை தொடர்கதையாக வைத்துள்ளதும் தெரியவந்தது. 

இதனால் காவல்துறையினர் சத்திய பாலுவின் மீது பெண் வன்கொடுமை, தாக்குதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
 

இதையும் படிங்க: பயோ கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி., மீட்பு பணிகள் தீவிரம்.!