பயோ கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி., மீட்பு பணிகள் தீவிரம்.!



in Chennai Manali Bio Gas Plant Fire Accident 

 

சென்னையில் உள்ள மணலி, சின்ன சேக்காடு பகுதியில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இருவனத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டு, சிலிண்டர் வெடித்து சிதறியது.

மீட்பு பணிகள் தீவிரம்

இந்த விபத்தில் பணியில் இருந்த 2 பேர் காயமடைந்த நிலையில், கரும்புகை சூழ்ந்துகொண்டதால் பலரும் மயங்கிப்போயினர். வெடி சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னை: கலிகாலம்.. தனிமை பெண்கள் டார்கெட்.. 3 பேர் கும்பலால் 34 வயது பெண்ணுக்கு விடுதி அறையில் நடந்த பயங்கரம்..!

chennai

ஒருவர் பலி

இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். காயமடைந்த 2 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட, மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். 

இதையும் படிங்க: சென்னை: ஓசி சோறு கொடுக்காத ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு; மூவர் கை எழும்பு முறிவு.!