சென்னை: ஜிம்முக்கு வந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்; பயிற்சியாளர் கைது.!

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில், ஸ்லாம் உடற்பயிற்சி (Slam Gym Fitness Center) நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சியாளராக சூர்யா என்பவர் இருந்து வருகிறார்.
ஆபாச வீடியோ
இந்த உடற்பயிற்சி நிலையத்திற்கு பெண் ஒருவர் பயிற்சிக்காக வந்திருந்த நிலையில், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்த சூர்யா, விடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டியதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: நண்பனின் மனைவியை மயக்கி நிர்வாண படங்கள் வாங்கி மிரட்டல்; இளைஞர் அதிர்ச்சி செயல்.!
பயிற்சியாளர் கைது
இதனால் பயந்துபோன பெண்மணி கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து சூர்யாவை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: "கேமிரா மட்டும் இல்ல, காலிலேயே விழுந்திருப்பர்" - அமைச்சர் மூர்த்தியை கலாய்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!