புதுக்கோட்டை இன்ஜினியர் கொலையில் திடீர் திருப்பமாக நண்பர் கைது... விசாரணையில் வெளிவந்த உண்மை.!

புதுக்கோட்டை இன்ஜினியர் கொலையில் திடீர் திருப்பமாக நண்பர் கைது... விசாரணையில் வெளிவந்த உண்மை.!



in-a-sudden-twist-in-the-pudukottai-engineer-murder-a-f

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரே கைது செய்யப்பட்டு இருப்பது  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த இன்ஜினியரான விஜயராகவன்(47) என்பவர் கடந்த 11ம் தேதி முட்புதற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

tamilnaduஅப்போது அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம்  என்ற 60 வயது தான் நபர்  கொலை செய்ததை ஒப்புக்கொண்டு காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வாக்கு மூலத்தில் "நானும் விஜயராகவனும் நண்பர்களாக பழகி வந்தோம். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவோம். அதேபோல சம்பவம் நடந்த தினத்தன்று மது அருந்தினோம். அப்போது எங்களுக்கிடையே செய்ய கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அவரவர் வீட்டிற்கு சென்றோம். அப்போது என் வீட்டு வாசலில் நின்று கொண்டு என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டினார் விஜயராகவன்.

tamilnaduவயது வித்தியாசம் பார்க்காமல்திட்டியதால்  நான் அவரை எச்சரித்தேன். ஆனாலும் கேட்காமல் என்னை திட்டிக் கொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்தி விட்டு  தப்பிச்சென்றேன் என தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.