தமிழகம்

கண்ணை மூடிய காமம்..! நண்பனின் அக்காவுடன் கள்ளக்காதல்..! கட்டிய மனைவி முன்பே சரமாரியாக வெட்டிய நண்பன்.!

Summary:

Illegal relationship between friend and his sister

சகோதரியாக பார்க்கவேண்டிய நண்பனின் அக்காவை சகநண்பன் கள்ளகாதலியாக மாற்றியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் தனது நண்பனை அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட ஒண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். 34 வயதாகும் ஆனந்தனுக்கு திருமணம் முடிந்து ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் ஆனந்தனும் அதே பகுதியை சேர்ந்த உதயா மற்றும் சுரேந்தர் மூவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகிவந்துள்ளனர்.

நெருங்கிய நண்பர்கள் என்பதால் நண்பர்கள் மூவரும் சக நண்பர்கள் வீட்டிற்கு மாறி மாறி செல்வது வழக்கம். அப்படித்தான் ஆனந்தன் தனது நண்பன் உதயா வீட்டிற்கு சென்றபோது அவரது அக்காவுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விஷயம் உதயாவுக்கு தெரியவர தனது நண்பன் ஆனந்தனை கண்டித்துள்ளார். மேலும், தனது நண்பர்களுடன் பேசுவதையும் உதயா நிறுத்தியுள்ளார். தற்போது ஊரடங்கு சமயத்தில் ஆனந்தன் உதயாவின் வீட்டிற்கு மறைமுகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உதயா தனது சக நண்பன் சுரேந்தரை அழைத்துக்கொண்டு ஆனந்தன் வீட்டிற்கு சென்று வெளியே நின்றபடி அவரை அழைத்துள்ளார். ஆனந்தன் வெளியே வந்ததும் மூவருக்கும் வாக்குவாதம் முற்றி கடைசியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில், தனது பைக்கில் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்துவந்த உதயா தனது நண்பன் ஆனந்தனை சராமரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ஆனந்தனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய ஆனந்தனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஆனந்தனின் மனைவி ஜெனிபர் கொடுத்த புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆனந்தனை வெட்டிவிட்டு தப்பிஓடிய நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement