தமிழகம்

அண்ணன் மனைவியுடன் முறையற்ற உறவு! தம்பிக்கு நேர்ந்த கதி! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

illegal affair with brotherinlaw

சென்னை மயிலாப்பூர்பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரின் அண்ணன் பழனி என்பவரும் செந்திலின் பக்கத்துக்கு வீட்டில் வசித்துவந்துள்ளார். செந்தில் குமாரின் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் செந்தில் அவரது அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இந்தநிலையில் செந்தில் ஒரு பெண்ணை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு குழந்தைகளும் உள்ளனர். ஆனால் அதன்பிறகும் அவர் அண்ணியுடன் தகாத உறவை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் செந்தில் தனது சகோதரன் பழனியின் மனைவியுடன் முறையற்ற பழக்கம் இருக்கும் விஷயம் தெரிய வந்ததால், செந்திலுக்கும் அவரது மூத்த சகோதரர் பழனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் செந்தில் தனது மனைவியுடன் பேசி கொண்டிருந்தை பார்த்த பழனி தனது தம்பியை இரும்பு கம்பி மற்றும் சிமென்ட் கல்லால் கொடூரமாக தாக்கியதில் செந்தில் உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, செந்தில்குமார் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செந்திலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சகோதரனை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற பழனியை போலீசார் கைது செய்தனர்.


Advertisement