தமிழகம் மருத்துவம்

கள்ளக்காதல் தகராறு! மருத்துவமனைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு! பதறி ஓடிய நோயாளிகள்!

Summary:

illegal affair issue

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவி என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை ரவி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவர் பணியில் இருக்கும்பொழுது மர்மநபர் ஒருவர், அந்த வார்டுக்குள் திடீரென நுழைந்து அவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவியை வெட்ட முயற்சித்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி, உயிர் தப்பிக்க மருத்துவமனை வளாகத்தில் அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். ஆனாலும் அந்த நபர், ரவியை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளார்.


இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள், அலறி அடித்து ஒட்டியுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து ரவியை வெட்டியா நபரை மடக்கிப்பிடித்தனர். படுகாயம் அடைந்த ரவியை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து அந்த மர்ம நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகரைச்சேர்ந்த அய்யப்பன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கைதான அய்யப்பனுக்கும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொழிலாளியாக வேலை செய்யும் கணவரை பிரிந்துவாழும் பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் அந்த பெண், ரவியுடன் நெருங்கி பழகி உள்ளார். இதனால் ரவிக்கும், அய்யப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரவியை அரிவாளால் வெட்டியதாக அய்யப்பன் போலீசாரிடம் கூறியுள்ளார்.


Advertisement