அட படிப்பு வரலனா அதுக்குன்னு இப்படியா செய்வாங்க... மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் சூடு.. கைதான தலைமை ஆசிரியர்..!

அட படிப்பு வரலனா அதுக்குன்னு இப்படியா செய்வாங்க... மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் சூடு.. கைதான தலைமை ஆசிரியர்..!


if-you-dont-want-to-study-then-do-this

திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் அருகே சரிவர படிக்காமல் இருந்து வந்த 4 ம் வகுப்பு மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் தலைமையாசிரியர் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இச்சம்பவத்தால் மாணவியின் முகத்தில் தீக்காயம் ஏற்படவே வலியால் துடித்துள்ளார் மாணவி. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சிகிச்சைக்காக மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் காவல் நிலையம் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி மீது புகார் அளித்துள்ளனர் மாணவியின் பெற்றோர்.

Headmaster

இதனையடுத்து போலீசார் தலைமை ஆசிரியர் உஷாராணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மேலும் போலீசார் அவரை விசாரணை நடத்திய போது திடீரென உஷாராணி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.