ஐஏஎஸ் கனவோடு டெல்லிக்குச் சென்ற தமிழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! காரணம் என்ன

ஐஏஎஸ் கனவோடு டெல்லிக்குச் சென்ற தமிழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! காரணம் என்ன



ias trainee suicide in delhi

ஐஏஎஸ் தேர்வு பயிற்சிக்காக டெல்லிக்கு சென்ற ஈரோடு மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்ன காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் தேவி தம்பதியினர். இவர்களுடைய ஸ்ரீமதி (20) என்ற மகளும் வருண்ஸ்ரீ (16) என்ற மகனும் இருந்தனர்.

ias trainee suicide in delhi

கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்த ஸ்ரீமதி ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என கனவு கண்டுள்ளார். இவரது கனவை நினைவாக அவரது பெற்றோர் ஸ்ரீமதியை டெல்லியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன் சேர்த்துவிட்டனர். அந்த பயிற்சி மையத்தின் அருகிலேயே உள்ள ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு அறை எடுத்து ஸ்ரீமதி தங்கியிருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த மற்றொரு மாணவியும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த நெல்லையை சேர்ந்த அந்த மாணவி வெளியில் சென்றுவிட்டார். யாரும் இல்லாத நேரம் பார்த்து ஸ்ரீமதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியில் சென்ற சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பிய நெல்லை மாணவி  ஸ்ரீமதி தூக்கில் தொங்கி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவர் இதைப்பற்றி ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனை கேள்விப்பட்ட அவர்களும், அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களும் அந்த அறைக்கு விரைந்து சென்றனர். மேலும் அவர்கள் இதுகுறித்து டெல்லி கரோல்பாக் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ias trainee suicide in delhi

இந்நிலையில் ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. டெல்லியில் தங்கியிருந்து படிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் கூறிவந்ததாக தோழிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஸ்ரீமதியின் அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அதில், தற்கொலை செய்ய தான் எடுத்த முடிவை குறிப்பிட்டு மன்னிக்கும்படி ஸ்ரீமதி கேட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டது பற்றி சத்தியமங்கலத்தில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கதறி அழுத ஸ்ரீமதியின் பெற்றோர் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஸ்ரீமதியின் உடல் இன்று (திங்கட்கிழமை) சத்தியமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. 

ஐஏஎஸ் கனவோடு டெல்லி சென்ற மகன் பிணமாக வீடு திரும்புவதை எண்ணி அவரது பெற்றோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.