தேர்தலில் மனைவி தோல்வி.! கணவர் விஷம் அருந்தி தற்கொலை.! எந்த கட்சி தெரியுமா.?

தேர்தலில் மனைவி தோல்வி.! கணவர் விஷம் அருந்தி தற்கொலை.! எந்த கட்சி தெரியுமா.?


husband suicide for wife loss in election

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள சாத்தூர் நகராட்சியில் மொத்த 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக 18 வார்டுகளில் வெற்றி பெற்று சாத்தூர் நகராட்சியைக் கைப்பற்றியது.  இந்தநிலையில் சாத்தூர் நகராட்சி 19-வது வார்டில்  சுகுணா என்பவர் அதிமுக சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் இவர் 215 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

நாகராஜன் தனது மனைவி தோல்வியடைந்ததில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.