கணவர் செய்த அட்டூழியம்.! வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய மனைவி கண்ட அதிர்ச்சி காட்சி!!



husband-second-marriage-while-first-wife-being-in-abroa

சென்னை தி.நகர் பத்மநாபன் தெருவில் வசித்து வந்தவர் சரண்குமார் ராஜி . இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த பிரசாந்தி என்ற பெண்ணுடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

திருமண வாழ்க்கை இனிதாக சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்  இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.மேலும் பிரசாந்தி, தனது மகளுடன் வசித்து வந்தார் .

marriage

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற பிரசாந்தி தனது மகளை கணவரிடம் விட்டுச் சென்றுள்ளார்.இதனை தொடர்ந்து படிப்பை முடித்த அவர் கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ளார். அப்பொழுது தனது மகளைப் பார்க்கும் ஆசையில் தனது கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு ராதா என்ற பெண் இருந்துள்ளார்.  அவரிடம் நீங்கள் யார் என கெட்டநிலையில் சரண்குமார் மனைவி என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்தி விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சரண்குமார் மீது  மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

marriage

அதனை தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டபோது கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்றதாக போலி ஆவணத்தை தயாரித்து, ராதாவை இரண்டாவது திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சரண்குமார் ராஜி கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.