மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு, கணவர் செய்த அதிர்ச்சி காரியம்.! ஏன்? என்ன காரணம்??



husband-killed-wife-and-commit-suicide

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அம்மன் கோவில் தோட்டத்தில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். 55 வயது நிறைந்த இவர் நசியனூர் பிரிவு பகுதிகளில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி கனிமொழி என்ற காந்திமதி. இவர்களது மகன் கார்த்தி. 27 வயது நிறைந்த அவர் அசாம் மாநிலத்தில் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று ஈஸ்வரன் வழக்கம் போல வேலை முடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்குள் உறங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மகன் கார்த்தி பெற்றோர்களிடம் பேசுவதற்காக போன் செய்துள்ளார். ஆனால் இருவருமே போனை எடுக்காத நிலையில், அவர் வீட்டின் அருகில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

Murder

இந்நிலையில் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அறைக் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கனிமொழி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் ஈஸ்வரன் ரத்தம் வழிந்த நிலையில் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் இருவரின் உடலையும் ஈட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில், ஈஸ்வரன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி கனிமொழியின் நெற்றியில் சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு, சமையலறைக்கு சென்று தனது கழுத்தை அறுத்துள்ளார். ஆனாலும் உயிர் போகாத நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் ஈஸ்வரன் அவ்வாறு செய்ததற்கு என்ன காரணம் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.