ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
43 மணிநேரம் தாயின் சடலத்துடன் இருந்த மகள்கள்.! தந்தையின் கொடூர செயல்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்கான்பியர். இவருக்கு வனஜா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் எட்டாம் வகுப்பும், இளைய மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ஜோஸ்கான்பியர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஊர் திரும்பினார்.
இந்தநிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட தகராறில், மனைவியை கத்தியால் குத்தி கொலை கொலை செய்து மனைவியின் உடலை கட்டிலுக்கு அடியில் துணியில் சுற்றி வைத்துள்ளார் ஜோஸ்கான்பியர்.
இந்தநிலையில், பள்ளியில் இருந்து திரும்பிய மகள்கள், தாய் உடலை பார்த்து கதறி அழுதனர். ஆனால் இருவரையும், ஜோஸ்கான்பியர் மிரட்டியுள்ளார். மேலும் தனது இரண்டு மகளின் வாயிலும் துணியை அமுக்கி, கயிற்றில் கட்டி போட்டுள்ளார். இந்தநிலையில், நேற்று காலை அவரது மூத்த மகள் வீட்டின் வெளியே வந்து, அக்கம் பக்கத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது மற்றொரு அறையில், ஜோஸ்கான்பியர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து இருவரின் சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 43 மணிநேரம் தாயின் சடலத்துடன் நடுங்கிய படி இருந்த குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.