மரணத்திலும் பிரியா ஜோடி.! மனைவி இறந்த துக்கம்.! மறுநாளே கணவருக்கு நேர்ந்த துயரம்.!!



husband-dead-next-day-after-wife-dead

மனைவி இறந்த மறுநாளே துயரத்தில் ஆழ்ந்திருந்த கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் கருப்பாயூரணி
 பகுதியைச் சேர்ந்தவர்  80 வயது நிறைந்த வீராயி. இவரது கணவர் முத்து அம்பலம். வீராயி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி உயிரிழந்தார்.

வீராயி அவர்களின் மறைவால் அவரது கணவர் முத்து அம்பலம் மிகுந்த சோகத்தில் இருந்தார். 67 வருடம் ஒன்றாக தன்னுடன் வாழ்ந்து வந்த தனது மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தவித்து வந்தார்.

Deaf

இந்நிலையில் அவர் மனைவி இறந்த மறுநாளே இரவு தூக்கத்திலேயே அவரும் காலமாகியுள்ளார். மனைவி இறந்த அடுத்த நாளே துயரத்தால் கணவன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 31 வயது நபர் வெட்டிக்கொலை; மதுரையில் பரபரப்பு சம்பவம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது பயங்கரம்.!

 

இதையும் படிங்க: 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!