31 வயது நபர் வெட்டிக்கொலை; மதுரையில் பரபரப்பு சம்பவம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது பயங்கரம்.!



in Madurai THideer Nagar Youth Killed 

 

இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், திடீர்நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணி (வயது 31). மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிறுத்தத்தில், பயணிகளை பேருந்தில் அனுப்பி வைக்கும் ஏஜென்ட் வேலையை இவர் மேற்கொண்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!

இளைஞர் வெட்டிக்கொலை

நேற்று இரவு நேரத்தில், ராமசுப்பிரமணி திடீர் நகர் சந்தன மாரியம்மன் கோவிலின் முன்புறம், தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த சில மர்ம நபர்கள், சுப்பிரமணியை அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றனர். 

madurai

பரிதாப மரணம்

ராமசுப்பிரமணியனின் தலை, நெற்றி, கை பகுதியில் படுகாயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து திடீர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மதுரை: காவலர் கொலை வழக்கில் திருப்பம்.. மைத்துனரின் பதறவைக்கும் செயல்.. விலகிய மர்மம்.!