#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
20 வயது கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், அழகர்கோவில் சாலையில், ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் ராஜபாண்டியன். இவர், இதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராஜபாண்டியனின் மகன் பாண்டி குமரன் (வயது 20), மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று இரவு நேரத்தில் தனது பாட்டியை காரில் அழைத்துக்கொண்டு மேலூர், சுக்காம்பட்டிக்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து மீண்டும் காரில் வீட்டிற்கு வந்தபோது, அவரின் நண்பர் கிஷோர் பாண்டி குமாரனை தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். மேலும், உடனடியாக பேச வேண்டும் என்பதால் விரைந்து வருமாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை: காவலர் கொலை வழக்கில் திருப்பம்.. மைத்துனரின் பதறவைக்கும் செயல்.. விலகிய மர்மம்.!
இளைஞர் வெட்டிக்கொலை
பாண்டி குமரனும் சுக்காம்பட்டி பிரிவு சாலைக்கு சென்றபோது, இருவரும் பேசியுள்ளனர். கிஷோருடன் வேறு சில நபர்களும் இருந்த நிலையில், இருதரப்பு கும்பலுக்கும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாண்டி குமரன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவருகிறது.
இதையும் படிங்க: துண்டு பிரசுரம் விநியோகம் செய்த பாஜக நிர்வாகி கைது.!