பெண் காவலரை வெறித்தனமாக துரத்தி துரத்தி வெட்டிய நபர்.! யார் அவர்? நடந்தது என்ன??husband-attack-police-wife-in-kanchipuram

காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. இவரது கணவர் பருத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டில்லி ராணி மற்றும் அவரது கணவருக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாட்டால் சண்டை சச்சரவு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

பெண் காவலரை துரத்தி வெட்டிய கணவர் 

அவ்வாறு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று டில்லி ராணி காஞ்சிபுரம் சங்கரமடம் சாலை தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மேகநாதன் திடீரென வழிமறித்துள்ளார். இதில் பெண் காவலர் டில்லி ராணி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்ட முயற்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.6 இலட்சம் நகைக்காக மூதாட்டி இரும்பு ராடால் அடித்தே கொலை; வாடகைக்கு குடியிருந்த வடமாநில இளைஞரின் அதிர்ச்சி செயல்?.!

kanchipuram

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண் காவலர் 

அதனைக் கண்டு அச்சத்தில் டில்லி ராணி எழுந்து தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் விடாது துரத்திய மேகநாதன் அவரை விரட்டி சென்று சாரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து மேகநாதன் தப்பி ஓடியுள்ளார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய டில்லி ராணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கணவர் கைது 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகி இருந்த மேகநாதனை தேடி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற மேகநாதனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

 

இதையும் படிங்க: பெண்கள் வீட்டை நோட்டமிட்ட இளைஞர்; சந்தேகத்தில் அடித்து நொறுக்கியதில் மயங்கி பலி.. சென்னையில் அதிர்ச்சி.!