பெண்கள் வீட்டை நோட்டமிட்ட இளைஞர்; சந்தேகத்தில் அடித்து நொறுக்கியதில் மயங்கி பலி.. சென்னையில் அதிர்ச்சி.!Kanchipuram Oragadam Man Died Peoples attacked 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில்களில் வேலை பார்த்து வரும் பெண்கள், அங்குள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் அறையெடுத்து தங்கியிருந்து வருகின்றனர். 

தர்ம அடி

இந்நிலையில், சம்பவத்தன்று ஓரடகம் பகுதியில் பெண்கள் தங்கியுள்ள அறையை நோட்டமிட்டவாறு இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து இருந்துள்ளார். இதனைக்கண்ட மக்கள் இளைஞனை திருடன் என எண்ணி சரமாரியாக அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: உடலில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி; லேப்டாப் சார்ஜ்போடும்போது விபரீதம்.!

மயங்கி விழுந்து பலி

இந்த சம்பவத்தில் மயங்கி விழுந்த இளைஞரை மீட்ட பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழப்பை உறுதி செய்தனர். 

காவல்துறை விசாரணை

உயிரிழந்த நபர் குறித்த விசாரணை செய்கையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பரசுராமன் (28) என்பது தெரியவந்தது. இவரை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய சில நிமிடங்களில் 17 வயது சிறுவன் பலி.! சென்னையில் பகீர்.!!