உடலில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி; லேப்டாப் சார்ஜ்போடும்போது விபரீதம்.!Chennai Ayanavaram Training Doctor Died 

 

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கியிருக்கும் பயிற்சி மருத்துவர் சாரணீதா (வயது 32). இவரின் கணவர் உதயகுமார். நாமக்கல்லை பூர்வீகமாக கொண்ட சாரணீதா, தற்போது பயிற்சியின் காரணமாக சென்னையில் தங்கி இருக்கிறார். 

மின்சாரம் தாக்கி பலி

இந்நிலையில், அவர் நேற்று லேப்டாபுக்கு சார்ஜ் போடும்போது, உடலில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவருகிறது. மனைவிக்கு நீண்ட நேரம் தொடர்பு கொண்ட கணவர், அவர் போன் எடுக்காத காரணத்தால் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய சில நிமிடங்களில் 17 வயது சிறுவன் பலி.! சென்னையில் பகீர்.!!

அவர்கள் விடுதிக்குள் சென்று பார்த்தபோது, சாரணீதா சார்ஜரை கையில் பிடித்தவாறு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

மரணம் உறுதி

தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சென்னை விரைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திஉள்ளது.

மருத்துவர் சரணிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையும் படிங்க: தனியார் அருவி பயன்பாட்டால் சோகம்; ஜீப் ஓட்டுநர் பலி., தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?.!