தனியார் அருவி பயன்பாட்டால் சோகம்; ஜீப் ஓட்டுநர் பலி., தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?.!



Tenkasi Courtallam Private Falls Jeep Accident 

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்காலிக தடை அருவியில் நீர் வரத்து குறைந்ததும் நீக்கப்பட்டு அறிவிக்கப்படும்.இதனால் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் நீராடி மகிழ மேக்கரையில் இருக்கும் தனியார் அருவிக்கு பயணிக்கின்றனர். 

ஜீப் கவிழ்ந்து விபத்து

இதனிடையே, இன்று தனியார் ஜீப் ஒன்றில் அருவிக்கு சென்ற ஜீப் ஓட்டுநர் ரித்திஷ் (வயது 38), வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து அச்சன்புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: அரசு பேருந்து மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாப பலி; 22 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, தனியார் நிலங்களில் அருவியை உருவாக்கி சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்து ஆபத்தான செயலுக்கு வழிவகை செய்யும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: இரயிலுக்கு அடியில் சிக்கி சுக்குநூறாகிய இருசக்கர வாகனம்; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்.!